×

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்க தயார்: டிடிவி.தினகரன் பரபரப்பு பேட்டி

மதுரை: மதுரையில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அளித்த பேட்டி:அதிமுக தொண்டர்கள் 90% பேர் எங்களிடம்தான் உள்ளனர். அதிமுகவினர் அமமுகவில் இணைவார்கள் என்றுதான் கூறியிருந்தேன். ஆடு நனைகிறது என ஓநாய் கவலைப்பட்டது போன்று, ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை இருக்கிறது.  தீர்ப்பின் மூலமாக இந்த ஆட்சி கவிழும் என மக்களே எதிர்பார்த்திருந்தனர். 18 எம்எல்ஏக்களின் நலனும், கட்சியின் நலனும், தமிழக மக்களின் விருப்பமும், தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான்.18 பேரும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர். தொகுதி மக்களை நேரில் சந்தித்து 18 பேரும் கருத்து கேட்டு வருகின்றனர். இவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்கும் வகையிலேயே மேல்முறையீடு  செய்ய உள்ளதாக தெரிவித்தோம். இந்த ஆட்சி தொடரக்கூடாது என்பதற்காகவே, தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இந்த விருப்பத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டேன். இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு  தெரிவித்துள்ளனர். மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்க 18 பேரும் முடிவு செய்துள்ளோம். நாங்கள் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாக உள்ளது.

நாங்கள் துரோகத்தின் பக்கம் செல்ல மாட்டோம்  என்று ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். 18 தொகுதிகள் மட்டுமல்ல. 24 தொகுதிகளிலும் தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். ஒரு தொகுதியில் கூட  ஆளுங்கட்சி டெபாசிட் பெறாது. அதிமுகவில் இப்போது வெறும் கூடு மட்டுமே உள்ளது.  தொண்டர்கள் என்ற உயிரோட்டம் எங்களிடம் மட்டுமே உள்ளது. இந்த ஆட்சியை இனியும் தொடர அனுமதிக்க மாட்டோம். தேர்தலை  சந்திக்கத் தயாராக உள்ளோம். இதுகுறித்த முறையான அறிவிப்பை வரும் 31ம் தேதி மதுரையில் வெளியிடுவோம். அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bye-election ,interview ,DV Vijayakrishnan ,Supreme Court , Supreme Court,Ready to meet,election,appeals: DTV
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு